icon

+91 8754820044
Book an Appointment

icon

293/5, M.G. Road, New Fairlands,
Salem - 636016

பூஞ்சை தொற்று

Welcome to Dr. Mythili's

Skin, Hair & Nail Specialist

Fungal Infection

பூஞ்சை நோய்த்தொற்றுகள்‌ மோசமடைவதையும்‌, பரவுவதையும் தவிர்க்க வழிமுறைகள்‌

பூஞ்சைகள்‌ ஈரமான துண்டுகளில்‌ உயிர்வாழும்‌ துண்டுகளை மற்றவர்களுடன்‌ பகிர்ந்து கொள்ள வேண்டாம்‌.
தொற்று உள்ள இடங்களில்‌ வியர்வை. ஈரம்‌ தங்காமல்‌ சுத்தமாக வைத்திருக்கவும்‌. இரண்டு வேளை குளிக்கவும்‌.
பாதிக்கப்பட்ட பகுதியில்‌ சொறிவதைத்‌ தவிர்க்கவும்‌.
சுத்தமான உலர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்‌.
குளித்தபின்‌ மீதமுள்ள தண்ணீரை நன்றாக துடைத்தபின்‌ ஆடைகளை அணிய வேண்டும்‌.
உள்ளாடைகள்‌, கால்‌ உறைகள்‌ ஆகியவற்றை தினமும்‌ துவைத்து சூரிய ஒளியில்‌ உலர்த்தவும்‌. நோய்‌ தொற்று உள்ளவர்களின்‌ துணியை தனியாக துவைக்க வேண்டும்‌.
நீரிழிவு நோய்‌ இருந்தால்‌ கட்டுப்பாட்டில்‌ வைக்கவும்‌.
பூஞ்சை தொற்று குணமடைய குறைந்தபட்சம்‌ 6 வாரங்கள்‌ தேவை. மருத்துவர்‌ ஆலோசனை இல்லாமல்‌ மருந்துகளை நிறுத்தினால்‌ மறுபடியும்‌ பூஞ்சை நோய்த்‌ தொற்றுக்கு ஆளாக நேரிடும்‌.
sq-sample26
sq-sample26