முகப்பரு
Welcome to Dr. Mythili's
Skin, Hair & Nail Specialist
முகப்பரு
இளவயதினர் பருவமடையும் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு தோன்றுகிறது.
தவறான உணவுப் பழக்கங்கள், இரவில் அதிக நேரம் விழித்திருத்தல், மன அழுத்தம். அதிக அளவு
அழகு சாதனங்கள் பயன்படுததுவது போன்றவற்றால் தற்போது நடு வயதினரையும் முகப்பரு பாதிக்கிறது.
சீழ் கொப்புளங்களுடன் வரும் பரு நிரந்திரமான முகத்தழும்புகளை உருவாக்குவதால் தகுந்த
நேரத்தில் சிகிச்சை அவசியமாகிறது.
பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
மரபணு காரணங்கள்
அளவுக்கு அதிகமாக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது
பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள்(Polycyctic Ovarian Disease)
சிலவகை மாத்திரைகள்
பெருமளவில் முகம் பாதிக்கப்படுகிறது.
நெஞ்சு, முதுகு போன்ற இடங்களில் சிகப்பு அல்லது கருமை நிறத்துடன் கூடிய
புள்ளிகளாக தோன்றுகிறது.
உணவில் பழங்கள். கீரைகள். முளைகட்டிய பயிறு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் தேவைக்கேற்ப அருந்துதல்.
முகத்தை தோல் மருத்துவர் அறிவுரையின் பேரில் சோப்பு போட்டு மூன்று முறை ஒரு நாளில் கழுவ
வேண்டும்.
சிறு கட்டிகள். வலியுடன் கூடிய கொப்புளங்களுடன் தோன்றும் பருக்களை உடனடியாக தோல்
மருத்துவரிடம் காண்பித்து தழும்புகள் வராவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமான இனிப்புகள். எண்ணையில் பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைத்த உணவுகள், மைதா
சேர்த்த. உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பருக்களை கிள்ளக்கூடாது.
கடைகளில் விற்கும் சிகப்பழகு களிம்புகளை மருத்துவர் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது.
எண்ணைப்பசை (Oily skin) உள்ள சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தற்போது முகப்பருவிற்கு நவீன சிகிச்சை முறைகள் ஏராளமாக உள்ளன.
முகப்பருவை எளிதில் குணமாக்கலாம்.
முகப்பருவால் வரும் தழும்புகளை நீக்க லேசர்(Laser) ,மைக்ரோடெம்அப்ரேசன் (Microdermabration), கெமிக்கல் பீலிங்(Chemical Peeling) போன்றவை உள்ளன.
முகப்பருவால் ஏற்படும் தழும்புகளை குறிக்கத்தான் நிரந்தரமாக அகற்ற முடியாது.

